உள்ளூர் செய்திகள்
புகையிலைப் பொருள்-மது விற்ற 2 பேர் மீது வழக்கு
- புகையிலைப் பொருள்-மது விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அரசலூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பதாகவும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டினர். அப்போது மது விற்பனையில் ஈடுபட்ட பள்ளபாளையம் ரவி (வயது 58), மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த சானர்பாளையம் சிவன் மூர்த்தி (47) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவர்களிடமிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.