உள்ளூர் செய்திகள்

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

Published On 2023-05-01 07:12 GMT   |   Update On 2023-05-01 07:12 GMT
  • 4 நான்கு சக்கர வாகனங்கள், 69 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாக னங்கள்.
  • 31 வாகனங்களை வாகன உரிமையாளர்களே ஏலம் மூலம் பெற்றுக்கொண்டனர்.

மொடக்குறிச்சி, மே.1-

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள், 69 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாக னங்களுக்கான பொது ஏலம் விட தயார் செய்ய ப்பட்டது.

இதில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த வாகனங்களின் உரிமை யாளர்களே ஏலத்தொ கையை செலுத்தி பெற்று க்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 31 வாகனங்களை வாகன உரிமையாளர்களே ஏலம் மூலம் பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து மீதமுள்ள 42 வாகனங்கள் ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் வாகனங்களை எடுப்பதற்காக முன்பணம் செலுத்தியிருந்த ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றனர்.

ஏலத்தினை ஈரோடு மது விலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

இதில் ஒரு நான்கு சக்கர வாகனம், 26 இரண்டு சக்கர வாகனங்கள் ரூ.4லட்சத்து 66ஆயிரத்து 336க்கு ஏலம் போனது. அதேபோல், வாகன உரிமையாளர்கள் பெற்று சென்றதுடன் சேர்த்து மொத்தம் 57 வாகனங்கள் ரூ.15 லட்சத்து 64 ஆயிரத்து 960க்கு ஏலம் போனது.

ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் 14 இரண்டு சக்கர வாகனங்கள் ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News