உள்ளூர் செய்திகள்
கிணற்றுக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு
- ஜான்சன் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.
- தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி ஜான்சனை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன் வெள்ளோட்டை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 34). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு தன்னுடைய நண்பர்களுடன் வெள்ளோடு அருகே உள்ள தர்மர் நகர் பகுதிக்கு சென்று ள்ளனர்.
அப்போது அங்குள்ள கிணற்று அருகில் சென்ற பொழுது ஜான்சன் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.
சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் 30 அடிக்கு தண்ணீர் இருந்தது தண்ணீரில் தத்தளித்தபடியே மேலே வர முடி யாமல் ஜான்சன் உயிருக்கு போராடியுள்ளார்.
இதனை பார்த்தவர்கள் உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி ஜான்சனை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.