உள்ளூர் செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட முயன்ற வாலிபர் கைது

Published On 2023-01-14 07:57 GMT   |   Update On 2023-01-14 07:57 GMT
  • ஒரு வாலிபர் அவரிடம் வந்து உன்னிடம் பணம் இருந்தால் கொடு என்று கேட்டுள்ளார்.
  • இதற்கு பூவேந்தன் என்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்து உள்ள சின்ன மடத்து பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பூவேந்தன் (வயது 28). இவர் பெருந்துறை பகுதியில் இருசக்கர வாகன டீலர் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் சரளை சென்று விட்டு பெருந்துறை வந்து கொண்டி ருந்தார். பெருந்துறை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது அவருக்கு போன் வந்தது. இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு போன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் வந்து உன்னிடம் பணம் இருந்தால் கொடு என்று கேட்டுள்ளார். இதற்கு பூவேந்தன் என்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதையடுத்து அந்த வாலிபர் அவரை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த வாலிபர் ஏற்கனவே என் மேல கொலை வழக்கு உள்ளது. பணம் கொடுக்க வில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி யதாகவும் கூறப்படுகிறது.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பூவேந்தன் சத்தம் போட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து விசாரித்தனர்.

இது குறித்து பூவேந்தன் பெருந்துறை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். பெருந்துறை சப்-இன்ஸ்பெ க்டர் வெங்கடாஜலம் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை பிடித்து விசா ரணை நடத்தினார்.

இதில் அவர் விஜய மங்கலம் சேரன் நகரை சேர்ந்த மணிகண்டன் (26) என தெரிய வந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மணிகண்டன் சிறையில் அடைக்க ப்பட்டார்.

Tags:    

Similar News