உள்ளூர் செய்திகள்

குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரைப்பாம்பு

Published On 2023-11-18 13:35 IST   |   Update On 2023-11-18 13:35:00 IST
  • குடியிருப்பு பகுதியில் பாம்பு உள்ளதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
  • சாரைப்பாம்பினை உயிருடன் மீட்டு சென்னிமலை அடர் வன பகுதியில் விட்டனர்.

சென்னிமலை:

சென்னிமலை அருகே கொளத்துபாளையம், தமிழ்நகர் குடியிருப்பு பகுதியில் பாம்பு உள்ளதாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு சதீஸ்குமார் தலைமையில் சென்ற வீரர்கள் குடியிருப்பு பகுதியில் காலியிடத்தில் பதுங்கி இருந்த 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பினை உயிருடன் மீட்டு சென்னிமலை அடர் வன பகுதியில் விட்டனர்.

இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags:    

Similar News