நடந்து சென்ற நர்சு மீது கார் மோதி பலி
- கார் எதிர்பாராத விதமாக பிரியா மீது மோதியது.
- பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி மறை மலை அடிகளார் வீதியை சேர்ந்தவர் பர்கத்துல்லா. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
பிரியா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பிரியா திருவண்ணாமலைக்கு சென்று விட்டு பு.புளியம்பட்டி வந்தார். இதை தொடர்ந்து அவர் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சத்தியமங்கலம் சாலை அய்யப்பன் கோவில் அருகே ரோட்டை கடந்து சென்றார். அப்போது சத்தியமங்கலம் சென்ற ஒரு கார் எதிர்பாராத விதமாக பிரியா மீது மோதியது.
இதில் பிரியா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்க த்தினர் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலம் அன்னூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பு.புளி யம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த மோகன்ராஜ் என்ப வரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்