பவானிசாகர் அணை பூங்கா அருகே 9 காட்டுயானைகள் கூட்டமாக சுற்றி திரிவதால் பரபரப்பு
- பட்டாசு வெடித்து விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி
- பவானிசாகர் அணை பூங்கா அருகே 9 காட்டுயானைகள் கூட்டமாக சுற்றி திரிவதால் பரபரப்பு ஏற்பட்டது
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை பகுதியில் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா பகுதி அருகே வனப்பகுதி உள்ளதால் அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி பூங்காவுக்குள் வருவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வன பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று பூங்காவுக்குள் நுழை ந்தது. பின்னர் வனத்துறை யினர் நீண்ட போராட்ட த்துக்கு பிறகு அந்த யானை யை வனப் பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் பவானிசாகர் பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து 9 காட்டு யானைகள் கூட்டமாக வெளியேறி ஊருக்குள் வர முயன்றது.
இது குறித்து பவானிசாகர் மற்றும் விளா முண்டி வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து யானை கூட்டங்களின் நடமாடத்தை கண்காணித்தனர். பின்னர் அந்த யானை கூட்டம் ஊருக்குள் வராதவாறு பட்டாசை வெடித்தும், அதிக ஒலி எழுப்பும் சைர னை ஒழிக்க விட்டும் யானை களை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.