உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் 45 சதவீதம் பேர் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்-மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் தகவல்
- ஈரோடு மாவட்டத்தில் 45 சதவீதம் பேர் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் தகவல் தெரிவித்தார்
- தற்போது மின் கம்பத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு,
ஈரோடு மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் மின் இணைப்பு மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அளவில் தற்போது 60 சதவீதம் மின் நுகர்வோர் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இது ஈரோடு மாவட்டத்தில் 45 சதவீதமாக உள்ளது. இதை மேலும் அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது மின் கம்பத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புகார் குறை, புது இணைப்பு விண்ணப்பித்தலும் ஆன்லைனில் பதிவு செய்வதால் விரைவாக பரிசீலனை செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.