புளியம்பட்டி பகுதியில் 400 போலீசார் குவிப்பு
- ஊர்வலமாக வந்து விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு எடுத்து செல்ல உள்ளனர்.
- 400 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டி செய்து வழிபட்டு வந்தனர்.
அதனைத்தொடர்ந்து இன்று இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 10 அடி விநாயகர் சிலை உள்பட மொத்தம் 36 சிலைகள் சத்தியமங்கலம் சாலை, பவானிசாகர் சாலை,
மாதம்பாளையம் சாலை, நம்பியூர் சாலை மற்றும் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு எடுத்து செல்ல உள்ளனர்.
இன்று மாலை நடக்க இருக்கும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்படி சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
விநாயகர் சிலைகள் செல்லும் அனைத்து சாலைகளிலும், முக்கிய வீதிகளிலும் சி.சி.டி.வி. கேமிராக்களை பொருத்தப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்சனை மற்றும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமை யிலான போலீசார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஐமன் ஜமால், இன்ஸ்பெக்டர் அன்பரசு உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.