உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 4 வாலிபர்கள் கைது
- பணம் வைத்து சூதாடிய 4 வாலிபர்கள் கைது செய்யபட்டனர்
- அவர்களிடம் இருந்து ரூ.720 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனா்.
ஈரோடு,
ஈரோடு பாரதிபுரம் அருகே உள்ள முற்காட்டில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.இதன்பேரில், ஈரோடு சூரம்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, சீட்டாட்டம் விளையாடி வந்த 4 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டை சேர்ந்த தேவராஜ்(30), கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பினை சேர்ந்த லோகநாதன்(39), சூரம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்த கண்ணன்(28), பாரதிபுரத்தை சேர்ந்த அருண்(25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.720 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனா்.