உள்ளூர் செய்திகள்
- போதைபொருள் விற்ற 4 பேர் கைது செய்யபட்டனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு சூரம்பட்டி, சத்தி, அம்மாபேட்டை, ஈரோடு டவுண் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 73), சத்தி வரதம்பாளையம் சகாதேவன் (50), அந்தியூர் மாரியப்பன் (37), மூலப்பட்டறை ரோடு பகுதியைச் சேர்ந்த வீரேந்திர யாதவ் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.