உள்ளூர் செய்திகள்

காரில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

Published On 2022-06-06 14:51 IST   |   Update On 2022-06-06 14:51:00 IST
  • காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
  • கஞ்சா பொட்டலங்களை போலிசார் பறிமுதல் செய்தனர்

ஈரோடு:

ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையிலான போலீசார் வில்லரசம்பட்டி ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த குமார்(20), நவீன் (20) என தெரியவந்தது.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார்.

அவரை பிடித்து விசாரித்தபோது அவர் குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தயை சென்னியப்பன் (58) என்பதும் 200 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார்.

அந்தியூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்த சென்னியப்பனை கைதுசெய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News