உள்ளூர் செய்திகள்

ஈங்கூர் ரெயில்வே மேம்பாலத்தில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

Published On 2023-11-11 12:20 IST   |   Update On 2023-11-11 12:20:00 IST
  • டிப்பர் லாரியும், டாரஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
  • இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னிமலை:

சென்னிமலை அருகே ஈங்கூர் ெரயில்வே மேம்பா லத்தில் நேற்று மதியம் 3.30 மணிக்கு வடக்கில் இருந்து தெற்காக வந்த டிப்பர் லாரியும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி மக்கா சோளம் ஏற்றி வந்த டாரஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டது.

இதில் 2 லாரிகளின் ஓட்டுநர்களுக்கும் காயம் பட்டு இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரின் உயிருக்கும் ஆபத்து இல்லை. சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சென்னி மலை-பெருந்துறை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்ட விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது.

இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News