உள்ளூர் செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்... ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி

Published On 2023-03-02 11:27 IST   |   Update On 2023-03-02 20:41:00 IST
2023-03-02 09:50 GMT

முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். அவர் சுமார் 76,834 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 28,637 வாக்குகளை பெற்று டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டார்.

2023-03-02 09:20 GMT

9-வது சுற்று முடிவு: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 70,299 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 45, 314 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 24,985 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,830, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 560 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

2023-03-02 09:09 GMT

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 7 வேட்பாளர்கள் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. 73-வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2023-03-02 08:47 GMT

8-வது சுற்று முடிவிலும் முன்னிலை வகிக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் 61,182 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 38, 834 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

2023-03-02 08:22 GMT

பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக ஈரோடு கிழக்கு வெற்றி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


2023-03-02 07:26 GMT

ஈரோடு இடைத்தேர்தல்: 7-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 19,936, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,006, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 492 வாக்குகளை பெற்றுள்ளனர்.

2023-03-02 07:24 GMT

7-வது சுற்று முடிவிலும் முன்னிலை வகிக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 33, 612 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

2023-03-02 07:02 GMT

6-வது சுற்று முடிவில் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். அவர் 46,179 வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

2023-03-02 06:47 GMT

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்றுவிட்டது என தேர்தல் முடிவு குறித்து அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு கூறியுள்ளார்.

2023-03-02 06:31 GMT

ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறவில்லை. பணநாயகம் முறையில் தான் தேர்தல் நடந்தது என ஈரோடு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம் குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News