உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

Published On 2023-08-25 09:02 GMT   |   Update On 2023-08-25 09:02 GMT
  • ஜி-20 மாநாட்டில் இந்தியா சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
  • கருத்தரங்கத்தில் 130 தேசிய தரைப்படை, கப்பற்படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் ஜி-20 அமைப்பின் தலைமைத்துவமும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்பணர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படையின் கடற்படை அதிகாரி வீ.சிவஇளங்கோ வரவேற்று பேசினார்.

கல்லூரி தாவரவியல் துறைதலைவர் சி.பி.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஜி-20 மாநாட்டில் இந்தியா சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதில் மாணவர்களின் பங்களிப்பு மிக அவசியம், என்றார். தேசிய மாணவர் தரைப்படை அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் நன்றி கூறினார்.

தூத்துக்குடி 29-வது தரைப்படை கம்பெனி ஆபீஸர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்ணல் பிரகோஷ் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், தேசிய மாணவர் படை அதிகாரிகள் சேக்பீர் முகம்மது காமில், சத்யன், ஐசக் கிருபாகரன், சூரிய பொன்முத்து ேசகரன் மற்றும் கே.ஏ. மேல்நிலைப்பள்ளி எல்.கே. மேல்நிலைப்பள்ளி, டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆதித்தனார் கல்லூரியை சேர்ந்த 130 தேசிய தரைப்படை, கப்பற்படை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனைப்படி தேசிய மாணவர்படை அதிகாரிகள் சிவமுருகன், சிவ இளங்கோ மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News