கிராமத்தில் புகுந்து இருசக்கர வாகனங்களை நாசம் செய்த காட்டு யானை
- கிராமத்திற்குள் அந்த யானை புகுந்து கரும்புகளை தின்று சேதப்படுத்தியது.
- இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுங்கி அட்டகாசம் செய்தது
சூளகிரி,
ஓசூர் அருகே சானமாவு காட்டில் காட்டு யானை ஒன்று பதுங்கி இருந்து அந்த பகுதிகளில் சுற்றித்திரிகின்றது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் சூளகிரி ஒன்றியம் பீர்ஜேபள்ளி அருகேயுள்ள நாயக்கனபள்ளி கிராமத்திற்குள் அந்த யானை புகுந்து கரும்புகளை தின்று சேதப்படுத்தியது.
மேலும் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுங்கி அட்டகாசம் செய்தது. பின்னர் அந்த யானை போடூர் காட்டுக்குள் சென்று விட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சேதமடைந்த இருசக்கர வாகனங்களை பார்வையிட்டனர்.
நாயக்கனபள்ளி கிராமத்திற்குள் யானை புகுந்ததால் இப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். போடூர் காட்டுப்பகுதியில் பதுங்கியுள்ள யானையை கர்நாடக மாநிலத்திற்கு விரட்டவேண்டும்.
யானையால் சேதமடைந்த இருசக்கர வாகனத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.