உள்ளூர் செய்திகள்

திருவனந்தபுரத்தில் என்ஜினீயரிங் பணி- குருவாயூர் எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்

Published On 2023-05-05 11:01 IST   |   Update On 2023-05-05 11:01:00 IST
  • திருவனந்தபுரம் கோட்டத்தில் என்ஜினீயரிங் தொடர்பான பராமரிப்பு பணிகள் இந்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ளன.
  • பயணிகளின் வசதிக்காக கோட்டயத்தில் கூடுதல் நிறுத்தம் ஏற்படுத்தப்படும்.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

திருவனந்தபுரம் கோட்டத்தில் என்ஜினீயரிங் தொடர்பான பராமரிப்பு பணிகள் இந்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

குருவாயூரில் இருந்து எழும்பூர் நோக்கி வரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்.16128) வருகிற 5(இன்று), 7, 9, 10, 12, 14, 16, 17, 19, 21, 22, 23, 24, 26, 28, 29, 30 மற்றும் 31-ந்தேதிகளில் கோட்டயம் வழியாக இயக்கப்படும். எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா செல்லாது. பயணிகளின் வசதிக்காக கோட்டயத்தில் கூடுதல் நிறுத்தம் ஏற்படுத்தப்படும்.

இதேபோல, எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்.16127) ரெயிலும் மேற்குறிப்பிட்ட நாட்களில் ஆலப்புழா செல்வதற்கு பதிலாக கோட்டயம் வழியாக இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News