உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை
- அன்பு குமார் நெல்லையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
- எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளதால் அன்பு குமாரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
நெல்லை, மே.29-
நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளம் அருகே உள்ள வடுகம்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் வனராஜ். லாரி டிரைவர். இவரது மகன் அன்பு குமார் (வயது 17). இவர் நெல்லையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் அன்பு குமார் வீட்டில் இருந்து வந்தார். அவர் எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதில் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து விட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அன்பு குமார் இறந்தார்.