உள்ளூர் செய்திகள்

சூலூர் அருகே விபத்தில் என்ஜினீயர் பலி

Published On 2022-12-18 08:50 GMT   |   Update On 2022-12-18 08:50 GMT
  • சரவணணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
  • எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியது. காரின் முன்பகுதி முழுவதும் ேசதம் அடைந்தது.

சூலூர்,

சூலூர் அருகே இருகூரை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது43). என்ஜினீயர். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மேலும் இருகூர் பா.ஜ.க முன்னாள் இளைஞரணி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இயற்கை அறக்கட்டளை அறங்காவலராகவும் பதவி வகித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று தங்கராஜ் தனது நண்பரான சரவணன்(40) என்பவருடன் காரில் இருகூர் நோக்கி வந்தார். சரவணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இருகூர் மயானம் அருகே கார் வந்த போது எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியது. காரின் முன்பகுதி முழுவதும் ேசதம் அடைந்தது.

இதில் காரில் இருந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரவணன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த தங்கராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்த சரவணணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிரேன் டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News