உள்ளூர் செய்திகள்

உடன்குடி பகுதியில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் - வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-03-02 12:41 IST   |   Update On 2023-03-02 12:41:00 IST
  • தண்டுபத்து கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • மாநில அமைப்பாளர் சசிகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் தூத்துக்குடி மாவட்ட பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. உடன்குடி ஒன்றிய தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். கணேச ஆதித்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் அசோக்குமார் வரவேற்று பேசினார். மாநில அமைப்பாளர் சசிகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

உடன்குடி பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடி அனல் மின் நிலைய பணிகளில் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை வழங்க வேண்டும். உடன்குடி பகுதியில் உள்ள அனைத்து நீர் பிடிப்பு குளங்கள் மற்றும் குட்டைகள், ஆறு ஆகிவற்றிற்கு வருடம் தோறும் தண்ணீர் கொண்டு வந்து முழுமையாக நிரப்பி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உடன்குடி நகர தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News