யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் வேலை வாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து பேசிய போது எடுத்த படம்.
வாசுதேவநல்லூரில் வேலைவாய்ப்பு முகாம் - யூனியன் சேர்மன் தொடங்கி வைத்தார்
- பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.
- வாசுதேவநல்லூரில் வேலைவாய்ப்பு முகாம் - யூனியன் சேர்மன் தொடங்கி வைத்தார்
சிவகிரி:
தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா, அரசு மூலம் வழங்கப்படும் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.
வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். தன்னம்பிக்கை, வெற்றி இலக்குகள் குறித்து சிறப்புரையாற்றினார். முகாமில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் மாவட்ட தொழில் மையம், தாட்கோ திறன் வளர்ப்பு கழகம் ஆகியன கலந்து கொண்டன. இதில் 500- க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் முருகன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர், வாசுதேவநல்லூர் வட்டார இயக்க மேலாளர் போத்திராஜ், வட்டார ஒருங்கி ணைப்பாளர்கள் ராம ச்சந்திரன், இசக்கியம்மாள், மகாராசி, உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.