உள்ளூர் செய்திகள்

கல்பனா சாவ்லா விருது பெற தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்- தஞ்சை கலெக்டர் தீபக்ஜேக்கப் தகவல்

Published On 2023-06-24 10:50 GMT   |   Update On 2023-06-24 10:50 GMT
  • சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும்.
  • இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப

தாவது:-

2023 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீர தீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.

இவ்விருது தொடர்பாக இணையதள முகவரியான https://awards.tn.gov. in- ல் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது ஆப் லைனில் இருந்தால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லார் நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையா சாலை, பெரியமேடு, சென்னை-600 003. எனும் முகவரிக்கு தபால் மூலமாக எதிர்வரும் வரும் 28-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-235633 என்ற தொலைபேசி எண்ணிலும், 7401703496 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News