உள்ளூர் செய்திகள்

மின்வாரிய ஓய்வூதியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மின்வாரிய ஓய்வூதியர்கள் அரை நிர்வாண போராட்டம்

Published On 2022-10-11 10:13 GMT   |   Update On 2022-10-11 10:13 GMT
  • புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்:

மின்சார சட்ட திருத்த மசோதா-2022-ஐ கைவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த பணி காலத்தை 50 சதவீதம் கணக்கில் எடுத்து பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது.

இதற்கு கிளை தலைவர் முனியாண்டி தலைமை தாங்கினார்.

இந்த நூதன போராட்டத்தில் ஆண்கள் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணத்தில் நின்று கோஷங்கள் எழுப்பினர்.

பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News