உள்ளூர் செய்திகள்

2 தடவை மின் கட்டணம் செலுத்தியவருக்கு பணத்தை திருப்பி வழங்கிய மின்துறை அதிகாரிகள்

Published On 2023-02-20 11:12 IST   |   Update On 2023-02-20 11:12:00 IST
  • வங்கி நிர்வாகத்திடம் தான் கட்டிய பணத்தை திரும்பப் பெற புகார் அளித்துள்ளார்.
  • மில் உரிமையாளர் விஸ்வநாதன் கட்டிய தொகை ரூ.45.225 மீண்டும் அவருக்கு திரும்ப கிடைத்தது.

பல்லடம் :

பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நூல் மில் உரிமையாளர் விஸ்வநாதன். இவர் தனது மில்லுக்கு பயன்படுத்திய மின்சாரத்திற்கு கட்டணம் ரூ.45.225யை ஜனவரி மாதம் 20 ந்தேதிக்குள் செலுத்த மின்சார வாரியம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி19ந்தேதி அன்று ரூ.45,225 இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் மின்வாரிய இணையத்தளத்தில் பணம் வரவு ஆகவில்லை.

இதையடுத்து வங்கியில் கேட்டபோது, இணையதள சர்வர் கோளாறு அதனால் பணம் வரவாகவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து நேரடியாக மின்வாரிய அலுவலகம் சென்று மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் வங்கி நிர்வாகத்திடம் தான் கட்டிய பணத்தை திரும்பப் பெற புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் மின்வாரிய கணக்கிற்கு தொகை சென்று விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் தான் இருமுறை மின் கட்டணத்தை செலுத்தியது குறித்தும், தனது பணத்தை திரும்பத் தரக்கோரி ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.புகாரை பெற்றுக் கொண்ட பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவகர், பல்லடம் வட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு ) அரி பாஸ்கர், ஆகியோர் இது குறித்து நடவடிக்கை எடுத்து, மில் உரிமையாளர் விஸ்வநாதன் இணையதளத்தில் செலுத்தப்பட்ட மின் தொகையை திரும்ப அவரது வங்கி கணக்கிற்கு செலுத்த நடவடிக்கை எடுத்தனர்.இதையடுத்து மில் உரிமையாளர் விஸ்வநாதன் கட்டிய தொகை ரூ.45.225 மீண்டும் அவருக்கு திரும்ப கிடைத்தது.

Tags:    

Similar News