கோப்பு படம்
தேனி அருகே மின் மோட்டார், வயர், பைக் திருட்டு
- மின் மோட்டார், வயர் மற்றும் பைக் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
சின்னமனூர்:
தேனி அருகே சின்னமனூர்- சுக்காங்கால்பட்டி சாலையில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். அவரது மனைவி விஜயலட்சுமி (வயது63). இவர்கள் சொந்தமாக விவசாய நிலம் மற்றும் தென்னந்தோப்பில் விவசாயம் செய்து வருகின்றனர்.
கோவிந்தராஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் விஜயலட்சுமி மட்டும் பண்ணை வீட்டில் தனியாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்த சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சீலப்பாலக்கோட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவர் தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே சில்வார்பட்டி, நல்லகருப்பன் பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (48). இவரது வீட்டில் இருந்த மோட்டாரை தேவதானப்பட்டியை சேர்ந்த பிச்சைபாண்டி (46) என்பவர் திருடிச் சென்றார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிச்சை பாண்டியை கைது செய்தனர்.