உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஷோபனா தலைமையில், மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது.

தருமபுரியில் வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

Published On 2022-12-17 15:10 IST   |   Update On 2022-12-17 15:10:00 IST
  • கலெக்டர் சாந்தி முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது.
  • வாக்களார் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் -2023 தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளரும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான ஷோபனா தலைமையில், மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023-ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணி குறித்தும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் , வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் மேல்தணிக்கை செய்யப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான படிவங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேற்படி ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023 -ல் பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஷோபனா அறிவுரை வழங்கினார்.

முன்னதாக, தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பூர், பாளையம் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி, பள்ளிப்பட்டி ஆகிய கிராமங்களில் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஷோபனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ராஜசேகரன், தேர்தல் தனி வட்டாட்சியர் சவுகத்அலி மற்றும் உதவி வாக்களார் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News