உள்ளூர் செய்திகள்
மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
- இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.
- விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பாலேகுளி பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி மீனாட்சி (வயது 83).
இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் எந்த பயனும் அளிக்காததால் மனவேதனை அடைந்தார். இதன்காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.