உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை டி.சி.டபிள்யு நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன், பள்ளியின் முதல்வர் அனுராதா ஆகியோர் பாராட்டிய போது எடுத்த படம்.


சர்வதேச மின்னணு கண்டுபிடிப்பு போட்டியில் சாகுபுரம் கமலாவதி பள்ளி- மாணவர்களுக்கு ஐன்ஸ்டீன் விருது

Published On 2022-10-10 09:05 GMT   |   Update On 2022-10-10 09:05 GMT
  • சாகுபுரம் கமலாவதி மாணவர்கள் இளம் ஐன்ஸ்டீன் விருது பெற்றுள்ளனர்.
  • பள்ளி மாணவர்களுக்கான ஜூனியர் ஐன்ஸ்டீன் தளத்தில் 43 படைப்புகள் காட்சிப்படுத்தினர்.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி மாணவர்கள் புதிய அறிவியல் சாதன கண்டுபிடிப்பு மற்றும் கண்காட்சி போட்டியில் சர்வதேச அளவில் சாதனை படைத்து இளம் ஐன்ஸ்டீன் விருது பெற்றுள்ளனர்.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின் மற்றும் மின்னணு பொறியாளர்கள் நிறுவனம், நீடித்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை சமூகத்திற்கு கொண்டு வரும் வகையில் இந்த போட்டி அறிவிக்கப்பட்டது. இதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் கடந்த மாதம் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நடைபெற்றன.

இதன் இறுதி போட்டி பெங்களுர் ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ஜினியரிங் கல்லூாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, ஜப்பான், இந்தோனோஷியா எகிப்து போன்ற நாடுகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மின்னணு படைப்புகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் காட்சிபடுத்தப்பட்டன. இதன்படி பள்ளி மாணவர்களுக்கான ஜூனியர் ஐன்ஸ்டீன் தளத்தில் 43 படைப்புகள் காட்சிப்படுத்தினர்.

சர்தேச அளவில் நடந்த இப்போட்டியில் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி சார்பில் 8 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 11-ம் வகுப்பு மாணவர் அனிஷ்சங்கர் தயாரித்த தானியங்கி கழிவு அகற்றும் கருவிக்கான படைப்பு முதல் பரிசை வென்றது.

300 அமெரிக்க டாலரையும் பெற்றது. 10-ம் வகுப்பு பயிலும் அபிஷேக்ராமின் 'செயற்கை நுண்ணறிவு இயக்கம்' என்கிற படைப்பு கவுரவ விருதை பெற்றது.

மேலும் 12-ம் வகுப்பு மாணவர் செய்யது முகம்மது புஹாரியின் 'பார்வையற்றோ–ருக்கான காலணி' படைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இப்போட்டியில் அதிகப்படியாக 3 பரிசுகளை வென்றதற்காக கமலாவதி பள்ளிக்கு 'தி ஹால் ஆப் பேம்' என்ற விருதும் கிடைத்துள்ளது.

இந்த வெற்றிகளுக்கு காரணமான மாணவர்கள் மற்றும் அடால் டிங்கரிங் ஆய்வக ஆசிரியை சேர்மசக்தி ஆகியோரை பள்ளியின் அறங்காவலர்களான டி.சி.டபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவர் ஜி.சீனிவாசன், மூத்த பொது மேலாளர் பி.ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் அனுராதா, தலைமை ஆசிரியர்கள் ஸ்டீபன் பாலாசீர், சுப்புரத்தினா, அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News