உள்ளூர் செய்திகள்

குன்னூரில் மாணவ-மாணவிகளுக்கு மத்தியில் பாட்டு பாடி அசத்திய கல்வி அதிகாரி

Published On 2023-07-05 09:11 GMT   |   Update On 2023-07-05 09:16 GMT
  • அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் அறிமுக விழா நடந்தது.
  • 12-ம் வகுப்புக்கு பிறகு என்ன மேல்படிப்பு படிக்கலாம் என்பது தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

குன்னூர்,

குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் அறிமுக விழா நடந்தது. குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் தலைமை தாங்கினார்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி மாணவ மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாட்டு பாடி அசத்தினார். அதன்பிறகு இளம்தலைமுறையினருக்கு கல்வி மிகவும் முக்கியம்.

தமிழக அரசு கல்வி மேம்பாட்டுக்காக அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதனை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு முழு முயற்சியுடன் படிக்க வேண்டும். அதன்பின் என்ன செய்ய வேண்டும் என்பதனை முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கேற்ப வியூகங்களை வகுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து நான் முதல்வன் கல்லூரி கனவு என்ற கையேடு மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அடுத்தபடியாக 12-ம் வகுப்புக்கு பிறகு என்ன மேல்படிப்பு படிக்கலாம் என்பது தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதற்கிடையே மாணவ- மாணவியருக்கு தேவையான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றை பெறும் வகையில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 

Tags:    

Similar News