உள்ளூர் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி உருவபொம்மை எரிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி உருவ பொம்மை எரிப்பு

Update: 2022-06-25 10:35 GMT
  • வேதாரண்யத்தில் அ.தி.மு.க.வினர் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டி இருந்தனர்.
  • தகவல் அறிந்து வந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க.வினர் சிலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டி இருந்தனர்.

இந்த நிலையில் வேதாரண்யம் ராஜாஜிபூங்கா எதிரே முன்னாள் நகர துணை செயலாளர் வீரராசு ,நகர அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி தலைவர் சதீஷ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரித்து கோஷமிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

Tags:    

Similar News