உள்ளூர் செய்திகள்

மெயினருவியில் இன்று காலை ஆர்ப்பரித்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு- தொடர் விடுமுறையால் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-10-03 08:59 GMT   |   Update On 2022-10-03 08:59 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.
  • மழை காரணமான அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கருப்பாநதி பகுதியில் 15.5 மில்லிமீட்டரும், அடவிநயினார், ஆய்க்குடி பகுதியில் 11 மில்லிமீட்டரும் மழை பதிவானது.

இதேபோல் சேர்வலாறு, பாபநாசம், தென்காசி, செங்கோட்டை, ராமநதி, குண்டாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமான குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் காரணமாக வறண்டு காணப்பட்ட அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளது.

தற்போது பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை காரணமாக இன்று காலை முதலே மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாக குளியல் போட்டனர்.

இதேபோல் பாபநாசம் அகஸ்தியர் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Tags:    

Similar News