உள்ளூர் செய்திகள்

வைகை அணை (கோப்பு படம்)

மழை இல்லாததால் 54 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்

Published On 2023-04-16 10:42 IST   |   Update On 2023-04-16 10:42:00 IST
  • கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழைப்பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.
  • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்மட்டம் தற்போது மழை இல்லாததால் 54 அடியாக குறைந்துள்ளது.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி,மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆனால் கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழைப்பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.

மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்மட்டம் தற்போது மழை இல்லாததால் 54 அடியாக குறைந்துள்ளது. இதனால் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணைக்கு நீர்வரத்து 49 கனஅடிநீராக உள்ளது.

72 கனஅடிநீர் மதுரை மாநகர மக்களின் குடிநீருக்காக திறக்கப்படுகிறது. இருப்பு 2602 மி.கனஅடியாக உள்ளது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.15 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லை. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1934 மி.கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது.

நீர்வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 155.59 மி.கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 61 அடியாக உள்ளது. அணைக்கு 3 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 23.09 மி.கனஅடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News