உள்ளூர் செய்திகள்

சுருளி அருவியில் குறைந்த அளவே தண்ணீர் வந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மழை இல்லாததால் சுருளி அருவியில் நீர்வரத்து சரிவு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Published On 2023-02-26 11:14 IST   |   Update On 2023-02-26 11:14:00 IST
  • மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் சுருளி அருவிக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது.
  • குறைந்த அளவே தண்ணீர் வந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலைஅடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் மூலிகை கலந்து வரும் தண்ணீரில் குளிப்பதற்காக தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் சுருளி அருவியில் புனிதநீராடி செல்கின்றனர். தற்போது மழைப்பொழிவு முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் சுருளி அருவிக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. மேலும் மேகமலை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் சுருளிஅருவியில் குறைந்தஅளவே தண்ணீர் வருகிறது.

இன்று விடுமுறை தினம் என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு படையெடுத்தனர். ஆனால் அங்கு குறைந்த அளவே தண்ணீர் வந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News