உள்ளூர் செய்திகள்

போதிய ஆசிரியர்கள் வராததால்பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி பாதிப்பு

Published On 2023-04-19 15:12 IST   |   Update On 2023-04-19 15:12:00 IST
  • பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது.
  • இந்த பணிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

சேலம்:

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, உரிய மதிப்பெண்கள் வழங்கும் பணி ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.

சில தனியார் பள்ளிகள் மட்டும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு தங்கள் ஆசிரியர்களை போதுமான அளவுக்கு அனுப்பாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதன் காரணமாக, விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டு உள்ளதால், தனியார் பள்ளிகளுக்கு அரசு தேர்வுகள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், தனியார் பள்ளி கள் தங்கள் ஆசிரியர்களை விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு அனுப்பாமல் அடுத்த கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பாட வகுப்புகளை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு பள்ளிக் கல்வித்துறை கூறிய எண்ணிக்கைப்படி, ஆசிரியர்களை அனுப்பாத தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த பள்ளியின் சார்பில் தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News