உள்ளூர் செய்திகள்

உடைந்த சாக்கடை பாலத்தை சிரமத்துடன் கடக்கும் வாகன ஓட்டிகள்.

திண்டுக்கல் நாகல் நகரில் சேதமடைந்த சாக்கடை பாலத்தால் விபத்து அபாயம்

Published On 2022-07-25 13:35 IST   |   Update On 2022-07-25 13:35:00 IST
  • திண்டுக்கல் நாகல் நகரில் சாக்கடை பாலம் கடந்த 2 ஆண்டுகளாக பாதிஉடைந்த நிலையில் உள்ளது
  • இதனால் வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது

திண்டுக்கல்:

திண்டுக்கல் நாகல்நகர் 36-வது வார்டு சீனிராவுத்தர் குறுக்குத் தெரு மற்றும் சேலாங்கேணி குறுக்குத் தெரு சந்திப்பில் உள்ள சாக்கடை இணைப்பு பாலம் கடந்த 2½ வருடமாக பாதியளவு உடைந்துள்ளது.

இதனால் இரு சக்கர வாகனங்கள் எதிரெதிரே கடந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் ஆட்டோ போன்ற வாகனங்கள் செல்லும் போது பாலத்தின் உடைந்த பகுதியில் சிக்கிக் கொண்டு பாலம் மேலும் சேதமடைந்து வருகிறது.

மாணவ-மாணவிகள் மற்றும் சிறு குழந்தைகள் சாக்கடையில் தவறி விழுந்து செல்லும் அவல நிலையும் உள்ளது. இரவு நேரங்களில் மிகவும் அபாயகரமான இடமாக உள்ளது.

இது குறித்து கவுன்சிலர் பவுமிதா பர்வீனிடம் பொது மக்கள் புகார் தெரிவிக்கை யில், பாலத்தை சரி செய்ய மாநகராட்சி சார்பில் அளவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இப்பாலம் முழுமையாக உடைந்து உயிர் பலி ஏற்படும் முன் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அருகில் உள்ள தெருக்களில் புதிய தாக தார் சாலைகள் போட ப்பட்டுள்ள நிலையில் சீனி ராவுத்தர் குறுக்குத் தெரு மற்றும் மாரியம்மன் கோவில் இருக்கும் தெருவி லும் சாலைகள் செப்பனிட ப்படாமல் உள்ளது வருத்தமாக உள்ளது என பொதுமக்கள் கூறினர்.

Tags:    

Similar News