உள்ளூர் செய்திகள்

திடீர் தொழில்நுட்ப கோளாறால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

Published On 2022-10-06 09:05 GMT   |   Update On 2022-10-06 09:05 GMT
  • தொழில்நுட்ப பழுது காரணமாக தொடர்ந்து மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
  • நாங்கள் ஒரு நாள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்றால் எங்களுக்கு அபராதம் விதிக்கிறீர்கள். இதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினர்.

நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்தும் எந்திரத்தில் கோளாறு காரணமாக மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் இன்று தவித்தனர்.

நெல்லை வண்ணார் பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்காக பொதுமக்கள் இன்று காலையில் இருந்து வந்தனர். காலை 8.30 மணிக்கு தொடங்கிய மின் கட்டணம் செலுத்தும் பணி தொடங்கிய அரை மணி நேரத்தில் தொழில்நுட்ப பழுது காரணமாக தொடர்ந்து மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

ஏற்கனவே தொடர் விடுமுறையால் 4 நாட்கள் அலுவலகம் செயல்படவில்லை.இந்த நிலையில் இன்று கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தனர்.

ஏற்கனவே இன்று மின் கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாள் என்பதால் சிலர் கட்டணம் செலுத்த வந்த போதும் கூட கட்டணம் செலுத்த முடியாமல் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

அப்போது அவர்கள் மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது நாங்கள் ஒரு நாள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்றால் எங்களுக்கு அபராதம் விதிக்கிறீர்கள். இதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினர். அதற்கு அங்குள்ள ஊழியர்கள் பதில் சொல்ல முடியாமல் தவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆன்லைன் மூலமும் மின்கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 12.15 வரை கோளாறு சரி செய்ய முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 

Tags:    

Similar News