கோப்பு படம்.
தேனி அருகே பேரூராட்சி ஊழியரை மிரட்டிய போதை ஆசாமி
- குடிபோதையில் இருந்தவர் தனது தெருவுக்கு எப்போது தண்ணீர் வரும் என கேட்டுள்ளார்.
- குடிபோதையில் இருந்தவர் பேரூராட்சி ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்து கேட் வால்வையும் உடைத்து சேதப்படுத்தினார்.
தேனி:
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் குடிநீர் பணியாளராக பணிபுரிந்து வருபவர் தங்கராஜ் (வயது 58). இவர் சம்பவத்தன்று மாரியம்மன் கோவில்பட்டி நாடக மேடை அருகே தண்ணீர் திறந்துவிடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் குடிபோதையில் தனது தெருவுக்கு எப்போது தண்ணீர் வரும் என கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த கணேசன் பேரூராட்சி ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்து கேட் வால்வையும் உடைத்து சேதப்படுத்தினார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ராவணா விஜயலட்சுமி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் பூதிபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான வாழையாறு குடிநீர் மின்னேற்று நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் வயரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் என தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.