உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் மாணவர்கள் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். அருகில் சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து.

விக்கிரவாண்டியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி

Published On 2023-06-27 13:16 IST   |   Update On 2023-06-27 13:16:00 IST
  • அரசு பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
  • கஞ்சா, குட்கா ,மது, புகையிலை பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர்.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அரசு பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. விக்கிரவாண்டி காவல்துறை சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமை தாங்கினார். மாணவர்களிடையே போதை பொருள்களான கஞ்சா, குட்கா ,மது, புகையிலை பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். சப் -இன்ஸ்பெக்டர் காத்தமுத்து போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், எதிர்காலம் வீணாவது குறித்தும் பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை ராதா, தனிப்பிரிவு ஏட்டு சிவக்குமார், முருகன், மாணவர்கள் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர். முடிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மன்மதவேல் நன்றி கூறினார்.

Tags:    

Similar News