உள்ளூர் செய்திகள்

கோவை மாநகரில் வரைபட அனுமதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் டிரோன் மூலம் கண்காணிப்பு

Published On 2023-08-19 15:03 IST   |   Update On 2023-08-19 15:03:00 IST
  • மாநகராட்சி பகுதியில் மற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களும் கண்காணிக்கப்பட உள்ளன.
  • கட்டிடங்களின் உயரத்தை அளவீடு செய்யும் வகையிலும் டிரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை,

கோவை மாநகராட்சி பகுதிகளில் வரைபட அனுமதியை மீறி கட்டப்பட் டுள்ள கட்டிடங்களை டிரோன் காமிராக்கள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என முதல்கட்டமாக கிராஸ்கட் சாலை பகுதியில், தனியார் அமைப்பின் பங்களிப்புடன் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

அதில், பல கட்டிடங்கள் விதிகளை மீறி கூடுதல் அளவுகளுடன் கட்டியதும், சில கட்டிடங்கள் வீடு கட்டுவதற்கான உரிமம் பெற்றுக் கொண்டு வணிக ரீதியாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த கட்டிட உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கட்டிடத்துக்கு உரிய வரி பெறப்பட்டு,அதன் பிறகு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநகராட்சி பகுதியில் மற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களும் கண்காணிக்கப்பட உள்ளன. குறிப்பாக உயரமான கட்டிடங்கள் அனுமதி பெற்ற அளவுகளில் கட்டப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறியவும் கட்டிடங்களின் உயரத்தை அளவீடு செய்யும் வகையிலும் டிரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த டிரோன் மூலம் கட்டிடங்களின் அளவு, வரை படம் உள்ளிட்டவற்றை கண்காணித்து குறிப்பிட்ட அளவுக்கு கூடுதலாக கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால், அவற்றை எளிதில் கண்டறிய முடியும்.அனுமதி பெற்ற அளவுக்கு மேல் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் அதற்கு உண்டான வரிவிதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News