அன்னூரில் பழுதான நிலையில் காணப்படும் குடிநீர் தேக்க தொட்டி
- எல்லப்பாளையத்தில் சுமார் 700 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
- குடிநீர் தேக்க தொட்டியானது விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் கரியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லப்பாளையத்தில் சுமார் 700 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு தேவையான குடிநீரானது தேக்க தொட்டியில் இருந்து வீட்டில் உள்ள குழாய்களுக்கு குடிநீர் வழங்கப்படுகின்றது.
ஆனால் இந்த குடிநீர் தேக்க தொட்டியானது விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. கிராமப்புற கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் திட்டத்தின் மூலம் 2014 முதல் 2015 வரை மதிப்பீட்டுத் தொகை ரூ.76 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பழுதுபார்ப்பு செய்யப்பட்டுள்ளது. இருந்தும் மேல் குடிநீர் தேக்க தொட்டியின் வெளிச்சுவர் மற்றும் அடிச்சுவர்களில் விரிசல் ஏற்பட்டு ஆங்காங்கே கம்பிகள் தெரிகின்றது.உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் இதனை மீண்டும் சீரமைத்து தடையில்லாமல் குடிநீர் வழங்குமாறு என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.