உள்ளூர் செய்திகள்
திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காட்சி.
சேலத்தில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
- திராவிட கழகத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மாவட்ட செயலாளர் வைரம் தலைமை தாங்கினார். திராவிட கழக பொதுச் செயலாளர் அன்புராஜ் ஆர்பட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
சேலம்:
நீதி துறையில் சமூக நீதியை நிலைநாட்ட வலியுறுத்தி திராவிட கழகத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வைரம் தலைமை தாங்கினார். திராவிட கழக பொதுச் செயலாளர் அன்புராஜ் ஆர்பட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் உயர் சாதியினர் சார்ந்த நீதிபதிகள் இருப்பதால் அவர் வழித்தோன்றல்கள் தொடர்ந்து முக்கிய பதவிகளில் பணியுமரத்தப்படுவதாகவும் இதனால் தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படு வதாகவும் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழக பொதுச்செய லாளர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர் பழனி, புள்ளையண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.