உள்ளூர் செய்திகள்

திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-12 10:04 GMT   |   Update On 2022-09-12 10:04 GMT
  • வேண்டுவோருக்கு அருள்புரியும் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
  • புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருகோலக்காவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

வேண்டுவோருக்கு வேண்டிய மாத்திரத்திலேயே அருள்புரியும் இந்த கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9ம் தேதி பூர்வாங்க பூஜை, 10ம் தேதி யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜையும் தொடங்கியது.

இன்று காலை 4ம் கால யாக சாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மல்லாரி வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது.

காலை 7:10 மணிக்கு சிவாச்சாரியார்கள், வேத மந்திரம் ஓத கடத்தில் இருந்து புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை கார்த்திகேய சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர்.

கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.

ஏற்பாடுகளை நகர வர்த்தகர்கள் சங்க தலைவர் சிவசுப்பி ரமணியன் தலைமையில செய்திருந்தனர்.

Tags:    

Similar News