உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் தி.மு.க சார்பில் நாளை நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

Published On 2023-08-19 09:50 GMT   |   Update On 2023-08-19 09:50 GMT
  • தருமபுரி கலைஞர் அறிவாலயத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க சார்பில் ஆலோ சனைகூட்டம் நடை பெற்றது.
  • உண்ணாவிரத அறப் போராட்டத்தில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பங்கேற்க செய்ய வேண்டு மென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தருமபுரி,

தமிழக முழுவதும் வரும் நாளை நீட் தேர்வை திணிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என தி.மு.க தலைவரும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தருமபுரி கலைஞர் அறிவாலயத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க சார்பில் ஆலோசனைகூட்டம் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாளை தருமபுரி தலைநகரில் நடைபெறும் நீட் தேர்வை திணிக்கும் பா.ஜ.க. அரசு மற்றும் தமிழக கவர்னரை கண்டி த்து உண்ணாவிரத அறப்போராட்டத்தில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பங்கேற்க செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர்கள் செல்வராஜ், மனோகரன் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி ஆதிதிரா விடர் நலக்குழு மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் செந்தில்குமார், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்யமூர்த்தி, மற்றும் தி.மு.க இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணியை சேர்ந்த கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News