உள்ளூர் செய்திகள்

ராஜா எம்.எல்.ஏ.விடம் வாழ்த்து பெற்ற தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள்

Published On 2023-04-12 14:39 IST   |   Update On 2023-04-12 14:40:00 IST
  • தென்காசி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக காசிராஜன் நியமிக்கப்பட்டார்.
  • புதிய நிர்வாகிகள் ராஜா எம்.எல்.ஏ.வை. சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு புதிதாக நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதலோடு விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. அறிவித்தார். அதன்படி தென்காசி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக பொய்கைமேட்டை சேர்ந்த காசிராஜனும், துணை அமைப்பா ளர்களாக சிவகிரி சேவுகபாண்டியன், சங்கரன்கோவில் கணேசன், வாசுதேவநல்லூர் கிருஷ்ணமூர்த்தி, சிவகிரி சரவணக்குமார், சின்னகோவிலாங்குளம் மகாராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.வை. சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, மதிமாரிமுத்து, நகர செயலாளர் பிரகாஷ், மாணவர் அணி கார்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News