உள்ளூர் செய்திகள்
சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஆய்வு
- செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் பாராட்டினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் அன்று நான்கு பிரசவங்கள் நடந்தது. அதில் ஒருவருக்கு மட்டுமே சுகப்பிரசவம்ஆன நிலையில் 3 நபர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் நடைபெற்றது. அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.
இவர்களை இணை இயக்குனர் பிரேமலதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், பிரசவ அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினர், செவிலியர்கள், சுகாதார பார்வையாளர் மற்றும் அனைத்து பணி யாளர்களும் உடன் இருந்தனர்.