உள்ளூர் செய்திகள்

 டவுனில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு முககவசத்தை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அணிவித்த காட்சி. 

நெல்லை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு முககவசம் வினியோகம்

Published On 2022-06-27 10:01 GMT   |   Update On 2022-06-27 10:01 GMT
  • மாநகர பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
  • மாற்றுத் திறனாளிகள் சிலருக்கு முககவசம் அணிவித்தனர்.

நெல்லை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முககவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

விழிப்புணர்வு

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி சார்பில் முககவசம் அணிந்து செல்வது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன.

அதன்ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு முககவசம் வினியோகிக்கும் நிகழ்ச்சியை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, நகர்நல அலுவலர் ராஜேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ரதவீதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், தள்ளவண்டிகடைகளில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி, தொற்று மீண்டும் அதிகரிப்பதால் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாற்றுத் திறனாளிகள் சிலருக்கு முககவசம் அணிவித்தனர்.

இதேபோல மாநகர பகுதி முழுவதும் பொது மக்களுக்கு முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாநகராட்சி சார்பில் 100 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News