உள்ளூர் செய்திகள்

பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழச்சி நடந்தது.

பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

Published On 2022-10-17 07:13 GMT   |   Update On 2022-10-17 07:13 GMT
  • வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை.
  • பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, வாய்மேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வாய்மேடு தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமை தாங்கினார். வாய்மேடு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார்.

வாய்மேடு கூட்டுறவு சங்கம் எதிரே உள்ள வாய்க்காலில் பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன், கிராம நிர்வாக அலுவலர்கள், வாய்மேடு காவல் நிலைய உதவியாளர் மற்றும் வாய்மேடு இலக்குவனார் பள்ளி ஆசிரியர் மணிமொழி, பள்ளி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News