முத்துமாரியம்மன் கோவிலில் இரு தரப்பினரிடையே போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
முத்துமாரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்வதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு-போலீசார் சமரசம்
- ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- கோவில் தற்காலிகமாக பூட்டப்பட்டிருந்தது இதனல் பாலாபி ஷேகம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நாகப்பட்டினம்,:
நாகப்பட்டினம் மாவட்ட ம், அக்கரைப்பேட்டை மீனவ கிராம முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக புனரமைப்பு பணிகள் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அதனால் ஆண்டு திருவிழா நிறுத்தப்பட்டு ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் திருவிழா நடத்த 30 பஞ்சாயத்துதாரர்களில் ஒரு தரப்பினரான 18 பேர் மட்டுமே கையெழுத்திட்ட நிலையில் மீதமுள்ளோர் கையெழுத்திடவில்லை.
இதனால் இருதரப்பினர் இடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க இருதரப்பினரையும் ஒன்றாக இணைந்து திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்து பெண்கள், ஆண்கள் என கிராம மக்கள் பாலாபிஷேகம் செய்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் மீனவ கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கோவில் தற்காலிகமாக பூட்டப்பட்டது.
இதனால் பாலாபி ஷேகம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் பூட்டப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கோவில் பூட்டப்பட்ட விசயம் மீனவ கிராமத்தில் தீயாக பரவியது. பாலாபிஷேகம் செய்ய வந்த பக்தர்கள் கோவிலை திறக்க கூறி வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து இரு தரப்பு மீனவர்களிடம் நாகப்பட்டினம் வட்டா ட்சியர் கார்த்திகேயன், நாகை டி.எஸ்.பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருதரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுப்ப ட்டனர்.
இந்நிலையில் உரிய பேச்சு வார்த்தை நடத்தி 12 மீனவ பஞ்சாயத்துதாரர்களிடம் கையொப்பம் பெறப்பட்டதை தொடர்ந்து கோவில் கதவு திறக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு பால் அபிஷேகம் நடைபெற்றது.