உள்ளூர் செய்திகள்

சிறுவர்கள் கொண்ட வந்த பாம்புகள்.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பாம்புடன் சிகிச்சைக்கு வந்த சிறுவர்களால் பரபரப்பு

Published On 2023-09-10 07:34 GMT   |   Update On 2023-09-10 07:34 GMT
  • வடமதுரை, முள்ளிப்பாடி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்றனர்.
  • 2 சிறுவர்கள் பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் மழை பரவலாக பெய்து வருகிறது. மேலும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த 3 நாட்களாக காலையில் மேகமூட்டத்துடனும், பிற்பகலில் வெயிலும் கொளுத்தி வருகிறது. மாலையில் சூட்டை கிளப்பி வருகிறது. மேலும் இரவில் குளிர் என சீதோஷண நிலை மாறி மாறி காணப்படுகிறது.

பூமி வெப்பத்தை அதிகளவு வெளிப்படுத்தி வருகிறது. இதனால் விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதி களுக்குள் படையெ டுத்து வருகிறது. பாம்பு, தேள் மற்றும் விஷ ஜந்துக்கள் கடித்து நாள்தோறும் பலர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வடமதுரை, முள்ளிப்பாடி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்றனர். இதில் குட்டியபட்டி முகேஷ் குமார் (14), மேட்டுப்பட்டி சேர்ந்த உதயகுமார் (16) ஆகியோர் கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்கா க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News