உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக கர்ப்பவாய் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை

Published On 2023-07-27 12:53 IST   |   Update On 2023-07-27 12:53:00 IST
  • கர்ப்பவாய் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பணிமனை திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.
  • முதல் முறையாக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 வயது பெண்மணிக்கு கர்ப்ப வாய் புற்றுநோய்க்கு வெர்திம்ஸ் ஹிஸ்டெரெக்டமி நுட்பம் மூலம் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

திண்டுக்கல் :

திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிர், இயல் நோய் சங்கம் இணை ந்து கோல்போஸ்கோபி கர்ப்பவாய் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பணிமனை திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.

கருத்தரங்கிற்கு திண்டு க்கல் மருத்து கல்லூரி முதல்வர் சுகந்தி இராஜ குமாரி தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணி ப்பாளர் வீரமணி, துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, மகப்பேறு துறைத்தலைவர் கீதா, சிறப்பு அழைப்பாளர் டாக்டர் ரமணி ராஜேந்திரன், டாக்டர் அமலா தேவி, நிலைய மருத்துவர் புவனேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்குயேற்றி தொடங்கி வைத்தனர்.

கருத்தரங்கில் பல்வேறு மகப்பேறு, அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் கலந்து கொண்டு கர்ப்பவாய் புற்றுநோய் காரணங்கள், அதைத்தவிர்க்கும் வழிமுறைகள், வருமுன் காப்போம், நோய் கண்டறி தல் மற்றும் நோய்தீர்வு பற்றி சிறப்பாகக் கலந்துரையாடி னார். கருத்தரங்கு மற்றும் பணிமனையில் 100 டாக்டர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

முதல் முறையாக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 வயது பெண்மணிக்கு கர்ப்ப வாய் புற்றுநோய்க்கு வெர்திம்ஸ் ஹிஸ்டெரெக்டமி நுட்பம் மூலம் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரால் செய்யப்பட்டு அப்பெண் உடல் நலம் பெற்று வீடு திரும்பினார்.

Tags:    

Similar News